Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் தொடரில் ரசிகர்களை அனுமதித்ததால் கரோனா பரவவில்லை - பிசிசிஐ தரப்பில் விளக்கம்!

ஐபிஎல் போட்டியில் நடராஜனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அச்சப்படத் தேவையில்லை என பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 23, 2021 • 18:35 PM
We Are Worried, But Panicking Is Unnecessary: BCCI Official After Natarajan's Covid Case
We Are Worried, But Panicking Is Unnecessary: BCCI Official After Natarajan's Covid Case (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நடராஜனுடன் தொடர்பில் இருந்த சக வீரர் விஜய் சங்கர், விஜய் குமார் (அணி மேலாளர்), ஷ்யாம் சுந்தர் (பிசியோதெரபிஸ்ட்), அஞ்சனா வன்னா (மருத்துவர்), துஷார் கேத்கர் (லாஜிஸ்டிக்ஸ் மேலாளர்), வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர் பி. கணேசன் ஆகியோரும் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தொடங்கும் முன்பு நடராஜனுக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து இப்போட்டி திட்டமிட்டபடி நடைபெற்றது. இதி டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Trending


இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் நடராஜனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அச்சப்படத் தேவையில்லை என பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பிசிசிஐ தரப்பில் கூறியதாவது, “நடராஜனுக்கு எப்படி கரோனா பாதிப்பு ஏற்பட்டது எனத் தெரியவில்லை. தீவிரமான கரோனா தடுப்புப் பாதுகாப்பு வளையத்தில் வீரர்கள் உள்ளார்கள். மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி வீரர்களிடம் கூறியுள்ளோம். இனிமேலும் யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு அதனால் ஐபிஎல் போட்டி பாதிக்கப்படாது என நம்புகிறோம். 

தற்போதைய நிலைமை எங்களுக்குக் கவலையளித்தாலும் பீதியடையத் தேவையில்லை. எல்லாமே நன்றாக நடக்கும் என நம்புவோம். கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து முழு ஆதரவு கிடைக்கிறது. எல்லாவற்றையும் அவர்களும் கவனித்து வருகிறார்கள். மைதானத்தில் பார்வையாளர்களை அனுமதித்ததால் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

நேற்று தான் சன்ரைசர்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தை விளையாடியது. அதற்கு முன்பே நடராஜனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஒட்டுமொத்த சன்ரைசர்ஸ் அணியும் தீவிரமான கரோனா தடுப்புப் பாதுகாப்பு வளையத்தில் தான் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement