SA vs IND: எங்ளது பார்ட்னர்ஷிப் தான் முடிவை மாற்றியது - டெம்பா பவுமா
இந்திய அணிக்கெதிரான முதல் போட்டியில் எவ்வாறு வெற்றிபெற்றோம் என்பது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 296 ரன்கள் குவித்தது. பின்னர் 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 265 ரன்களை மட்டுமே குவிக்க 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Trending
இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா கூறுகையில், “இந்த போட்டி எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் எங்களுக்கு நிறைய நம்பிக்கை கிடைத்துள்ளது. இந்த போட்டியில் நான் பேட்டிங் செய்ய சற்று சிரமப்பட்டாலும், வேண்டர் டுசைன் வேறு ஒரு மைதானத்தில் விளையாடுவது போல அவ்வளவு எளிதாக பந்துகளை அடித்து விளையாடினார்.
அவருடன் அமைத்த இந்த பார்ட்னர்ஷிப் தான் இந்த போட்டியின் முடிவை மாற்றியது எனக் கூறலாம். அவரது இந்த சிறப்பான இன்னிங்ஸ் தான் இந்திய அணியை வீழ்த்தியது. அதேபோன்று மார்கோ ஜான்சன் அறிமுகம் சிறப்பாக அமைந்தது. புதிய பந்தில் அவர் நன்றாக ஸ்விங் செய்கிறார். அவரது பந்துவீச்சில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது.
அதே போன்று எப்போதும் மார்க்கம் எங்களது அணியின் பந்து வீச்சிலும் கை கொடுக்கிறார். ஒரு அணிக்கு இவர் போன்ற ஒரு வீரர் நிச்சயம் அவசியம். மேலும் ஒட்டுமொத்தமாகவே எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் என அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே இந்திய அணியை வீழ்த்தினோம்” என தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now