இளம் வீரர்களுக்கும் ஸ்கெட்ச் ரெடி - டிம் சௌதி!
ரிஷப் பந்த், சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்காக புது வியூகங்களை கையாளவுள்ளதாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி தெரிவித்துள்ளார்
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை (ஜூன் 18) சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இரு அணி வீரர்களும் கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Trending
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி, ரிஷப் பந்த், சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்காக புது யுக்திகளை கையாளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய டிம் சௌதி, “இந்த ஆட்டம் மிகக் கடினமானதாக இருக்கும் என்பதை அறிவோம். ஆனாலும் தகுதிவாய்ந்த வீரர்கள் எங்கள் அணியில் இருப்பதுடன், இறுதி ஆட்டங்களில் விளையாடிய அனுபவமும் எங்களுக்கு உள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய இரு டெஸ்ட் போட்டிகளும் எங்களுக்கு நல்லதொரு தயார்நிலையை அளிப்பதாக இருந்தது. ரோஹித் போன்ற சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடிய வீரர்கள் இந்திய அணியில் இருக்கின்றனர்.
அனுபவமிக்க ரோஹித் போன்ற வீரர்களுக்காக மட்டுமல்லாமல், ரிஷப் பந்த், ஷுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்காகவும் நாங்கள் சில வியூகங்களை தயார்செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now