
We Kept Cool Minds And Focused, Yash Dhull After Winning U19 World Cup Final (Image Source: Google)
யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி அண்டர் 19 உலகக்கோப்பையில் 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. நேற்று இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணிதான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. எனினும் இந்திய பந்துவீச்சாளர்கள் ரவிக்குமார் 4 விக்கெட்களும், ராஜ் பவா 5 விக்கெட்களும் கைப்பற்ற அந்த அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி எந்தவித பதற்றமும் இன்றி சீரான இடைவெளியில் ரன்களை உயர்த்தியது.
இறுதியில் ராஜ் பவா 35 ரன்கள் கொடுத்து பார்ட்னர்ஷிப் அமைக்க 47.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.