Advertisement

ஐபிஎல் 2022: தோனி களத்தில் இருந்ததால் நாங்கள் டென்ஷன் இல்லாமல் இருந்தோம் - ரவீந்திர ஜடேஜா!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவை த்ரில் வெற்றியைப் பெறவைத்த மகேந்திர சிங் தோனியை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பாராட்டியுள்ளார்.

Advertisement
We Knew That The Great Finisher Of The Game Was There: Jadeja On Dhoni's Heroics
We Knew That The Great Finisher Of The Game Was There: Jadeja On Dhoni's Heroics (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 22, 2022 • 11:10 AM

ஐபிஎல் 15ஆவது சீசனின் 33ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.மும்பை இன்னிங்ஸ்:

Bharathi Kannan
By Bharathi Kannan
April 22, 2022 • 11:10 AM

அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா 0 (2), இஷான் கிஷன் 1 (0) இருவரும் முதல் ஓவரிலேயே முகேஷ் சௌத்ரியிடம் விக்கெட்களை பறிகொடுத்தனர். அடுத்து சூர்யகுமார் யாதவ் 32 (21), திலக் வர்மா 51 (43), க்ரிதிக் ஷோகீன் 25 (25) ஆகியோர் தங்களது பங்களிப்பை வழங்கியதால், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 155/7 ரன்களை சேர்த்தது.

Trending

இலக்கை துரத்திக் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் கோல்டன் டக் ஆனார். அடுத்து ராபின் உத்தப்பா 30 (25), அம்பத்தி ராயுடு 40 (35), டுவைன் பிரிடோரியஸ் 22 (14) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்கள். இறுதியில் நான்கு பந்துகளில் 14 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தது. அப்போது தோனி ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகளை விளாசியதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 156/7 ரன்கள் எடுத்து, 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தோனி 28 (13) கடைசிவரை களத்தில் இருந்தார்.

இப்போட்டியில் த்ரில் வெற்றியைப் பெற்ற பிறகு பேசிய ஜடேஜா, “போட்டி பரபரப்பாக சென்றதால், நாங்கள் டென்சனில் அமர்ந்திருந்தோம். இருப்பினும், தோனி ஆட்டமிழக்காமல் இருந்தது எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்தோம். இறுதியில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்துவிட்டார். 

முகேஷ் சௌத்ரி பவர் பிளேவில் சிறப்பாக பந்துவீசியது மகிழ்ச்சியான செய்தி. இருப்பினும், நாங்கள் தொடர்ந்து சுலபமான கேட்ச்களை விடுவது கவலையளிக்கிறது. இதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, தவறுகளை விரைவில் திருத்திக்கொள்வோம்” எனக் கூறினார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement