
நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சிஎஸ்கே, இம்முறை எப்போதும் இல்லாத அளவுக்கு புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்தது. சிஎஸ்கேவின் தோல்விக்கு கேப்டன்கள் மாற்றம், வீரர்களின் காயம் என்று பல காரணங்கள் கூற பட்டாலும், ரவி சாஸ்த்ரி கூறியுள்ள கருத்து யோசிக்க வேண்டிய விஷயமாகவே உள்ளது.
இது குறித்து பேசிய ரவி சாஸ்த்ரி, "ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக சிஎஸ்கே சிறப்பாக செயல்பட்டது. ஆனால் அதற்கு எல்லாம் ரெய்னாவும் ஒரு காரணம் என்று அவர்கள் மறந்துவிட்டனர். ரெய்னா தனது திறமையை ஐபிஎல் தொடரில் நிரூபித்தவர். ரெய்னா அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இதனால் சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் ஒரு நிலைத்தன்மை இருக்கம்.
ரெய்னாவின் பேட்டிங் மற்ற வீரர்கள் மீதான அழுத்தத்தை குறைத்துவிடும். இதனை தான் சிஎஸ்கே தற்போது மிஸ் செய்கிறது. ரெய்னா மாதிரி ஒரு வீரர் பேட்டிங் வரிசையில் இருக்கும் போது ராயுடு, ராபின் உத்தப்பா ஆகியோருக்கு தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்த சுதந்திரம் கிடைக்கும்.