Advertisement

இந்த சீசனிலேயே இப்போட்டியில் மட்டும்தான் நாங்கள் தோல்வியடைந்தோம் - ரிக்கி பாண்டிங்!

2022ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனிலும் டெல்லியில் கேப்பிட்டல்ஸ் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களையும் தக்கவைக்க விருப்பமாக இருக்கிறது என்று பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Advertisement
'We Were Outplayed': Ponting Explains How Poor Batting Cost DC The Game Against KKR
'We Were Outplayed': Ponting Explains How Poor Batting Cost DC The Game Against KKR (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 14, 2021 • 12:09 PM

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் 2ஆவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 14, 2021 • 12:09 PM

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது. 136 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Trending


தோல்விக்குப்பின் பேசிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், “2ஆவது தகுதிச்சுற்றிலும் நாங்கள் கொல்கத்தா அணியால் தோற்கடிக்கப்பட்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரையும் அடுத்த சீசனுக்கும் தக்கவைக்கவே விரும்புகிறோம்.

நேர்மையாகக் கூறினால், எங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு வீரரும் தனித்தன்மையான திறமையுடையவர்கள், டெல்லி அணிக்கு இதுவரை கிடைத்திராத வீரர்கள். கடந்த இரு சீசன்களிலும் வீரர்களும், அணியின் ஊழியர்களும் அருமையான பங்களிப்புச் செய்தனர். எங்களின் செயல்பாடுதான் எங்கள் விளையாட்டில் பேசியது அதை வைத்தே தெரி்ந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டும் எங்களால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாதது வருத்தமாக இருக்கிறது. அடுத்த சீசனுக்கான ஏலத்தில் 3 முதல் 4 வீரர்களைத் தக்கவைக்க முடியும். ஆனால், ஏலத்தில் அனைத்து வீரர்களையும் தக்கவைக்க விரும்புகிறோம். கடந்த 3 சீசன்களாக ஒரு குடும்பமாக இருந்து சிறப்பாகச் செயல்பட்டோம், மறக்கமுடியாத வெற்றிகளையும், நினைவுகளும் கிடைத்தன.

இந்தப் போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்ததற்கு கூடுதலான ரன்கள் அடிக்காமல் இருந்ததே காரணம். இந்த ஐபிஎல் சீசன் முழுமையாகப் பார்த்தால், இந்த ஒரு போட்டியில் மட்டும்தான் நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம். நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம், ரன்களும் சேர்க்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்தோம்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஸ்ரேயாஸ் அய்யரும், ஹெட்மயரும் கடைசி நேரத்தில் நிலைக்காவிட்டால், நாங்கள் 130 ரன்களைக் கூட எட்டியிருக்க முடியாது. இதுபற்றி நிச்சயம் ஓய்வறையில் பேசுவோம். நாங்கள் ஐபிஎல் சீசனை முடித்தவிதம் எங்களுக்கு வேதனை தருவதாகவே இருக்கிறது” என்று தெரிவித்தார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement