
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரிய டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்தது இங்கிலாந்து அணி. 3 போட்டிகளிலுமே இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே படுமோசமாக விளையாடியது.
இந்த தொடரின் கடைசி 2 போட்டிகளிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஜோ ரூட் பேட்டிங்கில் தனி நபராக இங்கிலாந்துக்காக போராடுகிறார். அவர் பேட்டிங்கில் அசத்தினாலும், அவரது கேப்டன்சி மோசமாக உள்ளது. 2021ஆம் ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதன்மூலம் ஓராண்டில் அதிகமான டெஸ்ட் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்தளவிற்கு படுமட்டமாக வேறு ஒரு அணி விளையாடி பார்த்ததில்லை என்று ரிக்கி பாண்டிங் விமர்சித்திருந்தார். ரூட்டின் கேப்டன்சி கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.