Advertisement

ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனை விருதை வென்றார் ஹீலி மேத்யூஸ்!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹீலி மேத்யூஸ் 2023ஆம் ஆண்டிற்கான ஐசிசிசிறந்த டி20 வீராங்கனையாக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 24, 2024 • 16:11 PM
ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனை விருதை வென்றார் ஹீலி மேத்யூஸ்!
ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனை விருதை வென்றார் ஹீலி மேத்யூஸ்! (Image Source: Google)
Advertisement

ஐசிசி என்றழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுசில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு 4 வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்திருந்தது.

இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்ட்ன் ஹீலி மேத்யூஸ், இங்கிலாந்து அணியில் சோஃபி எக்லெஸ்டோன், ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி மற்றும் இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து ஆகியோரது பெயர்கள் பரிந்துரைப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் 2023ஆம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த டி20 வீராங்கனை விருதை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.

Trending


அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹீலி மேத்யூஸ் 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த டி20 வீராங்கனையாக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அவர் 2023ஆம் ஆண்டில் மொத்தமாக 14 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 700 ரன்களையும், 19 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

மேலும் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் இந்த விருதை வெல்லும் இரண்டாவது வீராங்கனை எனும் பெருமையையும் ஹீலி மேத்யூஸ் பெற்றுள்ளார். முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டெஃபானி டெய்லர் ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனை விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement