Advertisement
Advertisement
Advertisement

WI vs SA: டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
WI vs SA: டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
WI vs SA: டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 03, 2024 • 11:44 AM

தென் ஆப்பிரிக்க அணி இம்மாதம் வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது வரும் ஆகஸ்ட் மாதம் 07ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை டிரினிடாட்டில் நடைபெறவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 03, 2024 • 11:44 AM

அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை கயானாவில் நடைபெறவுள்ளது. இநிலையில் இத்தொடரில் பங்கேற்கும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியானது சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்செனிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

Trending

அதேசமயம் அறிமுக வீரரான மேத்யூ ப்ரீட்ஸ்கி மற்றும் ரியான் ரிக்கெல்டன் ஆகியோரும் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் இடம்கிடைத்துள்ளது. மேற்கொண்டு ஐடன் மார்க்ரம், கேசவ் மஹாராஜ், நந்த்ரே பர்கர், காகிசோ ரபாடா, டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், லுங்கி இங்கிடி, வியான் முல்டர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது நேற்று அறிவிக்கப்பட்டது. கிரேக் பிராத்வைட் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வீரர் அல்ஸாரி ஜோசப்பிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, அணியின் துணைக்கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்டர் ஜோஷுவா டா சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு கெவின் சின்க்ளேரும் இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இங்கிலாந்து தொடரில் இடம்பிடிக்காமல் இருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கீமார் ரோச் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். மேற்கொண்டு ஷமார் ஜோசப், குடகேஷ் மோட்டி, ஜேசன் ஹோல்டர், கேசி கார்டி, அலிக் அதானாஸ் உள்ளிட்ட வீரர்களும் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ளனர். ஏற்கெனவே விண்டீஸ் அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இழந்துள்ளதால் இத்தொடரில் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி: கிரெய்க் பிராத்வைட் (கே), ஜோசுவா டா சில்வா, அலிக் அதானாஸ், கேசி கார்டி, பிரையன் சார்லஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜேசன் ஹோல்டர், கேவாம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், ஷமர் ஜோசப், மிகைல் லூயிஸ், குடகேஷ் மோட்டி, கெமர் ரோச், ஜேடன் சீல்ஸ், ஜோமெல் வாரிக்கன்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கி, நந்த்ரே பர்கர், டோனி டி ஸோர்ஸி, கேசவ் மஹராஜ், ஐடன் மார்க்ராம், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, டேன் பேட்டர்சன், டேன் பீட், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement