
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 17-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது.
நியூசிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு சற்று முன் பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து அறிவித்தது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடும் முடிவை திரும்பப் பெற்றது.
டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்று விளையாட இருக்கிறது. இரண்டு முக்கிய அணிகள் விலகிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் எங்களுடைய கமிட்மென்ட்-க்கு நாங்கள் மதிப்பளிக்க திட்டமிட்டுள்ளோம் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் தலைமை நிர்வாக அதிகாரி ஜானி கிரேவ் தெரிவித்துள்ளார்.