
West Indies Post 145/9 Against Australia In 1st T20I; Mayers Top Scores With 39 While Hazlewood Grab (Image Source: Google)
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் குயின்ஸ்லாண்டில் இன்று தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் 3 ரன்களிலும், பிராண்டன் கிங் 12 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த கைல் மேயர்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் 19 ரன்களோடு ரெய்ஃபெரும், நிக்கோலஸ் பூரன், ரோவ்மன் பாவெல் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினர்.