
West Indies Recall Bravo, Gabriel For 2nd Test Match Vs South Africa (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 18) செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்துள்ளாதால், இப்போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.