Advertisement

இப்படி ஒரு சிறப்பான வெற்றி எங்களுக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது - நிக்கோலஸ் பூரன்!

எங்களது அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்காய் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசினார். அதுமட்டும் இன்றி பிரெண்டன் கிங்கும் பேட்டிங்கில் எங்களுக்கு வெற்றியை தேடி தந்தார் என நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

Advertisement
West Indies Skipper Pooran Wants His Batters To Be More Consistent
West Indies Skipper Pooran Wants His Batters To Be More Consistent (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 02, 2022 • 12:01 PM

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நேற்று செயின்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஹார்டிக் பாண்டியா 31 ரன்களையும், ஜடேஜா 27 ரன்களையும் குவித்தனர்

Bharathi Kannan
By Bharathi Kannan
August 02, 2022 • 12:01 PM

பின்னர் 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரையும் அவர்கள் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை செய்துள்ளனர்.

Trending

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான், “இறுதியாக தற்போது தான் எனக்கு மூச்சே வருகிறது. இந்த கோடை முழுவதுமே எங்களுக்கு கடினமாக இருந்தது. பல போட்டிகளை நாங்கள் நெருக்கத்தில் சென்று தோற்றுள்ளோம்.

ஆனால் இறுதியில் இப்படி ஒரு சிறப்பான வெற்றி எங்களுக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது. எங்களது அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்காய் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசினார். அதுமட்டும் இன்றி பிரெண்டன் கிங்கும் பேட்டிங்கில் எங்களுக்கு வெற்றியை தேடி தந்தார்.

இந்த ஆட்டத்தின் மூலம் பிரண்டன் கிங் இன்னும் தனது பேட்டிங்கில் செய்ய வேண்டிய முன்னேற்றங்கள் குறித்து கற்றுக் கொள்வார். காயத்திலிருந்து திரும்பிய தாமஸ் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஒட்டுமொத்தமாகவே இந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தோம்.

இனிவரும் போட்டிகளிலும் இதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி நாங்கள் இந்திய அணியை இந்த டி20 தொடரில் வீழ்த்த முயற்சிப்போம்” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement