2nd Test, Day 1: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; பாகிஸ்தானை 154 ரன்னில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்!
முல்தானில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 163 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், பாகிஸ்தான் அணியும் 154 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 25) முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்றள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய விண்டீஸ் அணி பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தன்ர்.
அந்த அணியின் டார் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 54 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த குடகேஷ் மோட்டி - கீமார் ரோச் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் கீமார் ரோச் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இறுதியில் குடகேஷ் மோட்டி மற்றும் ஜொமல் வாரிக்கன் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குடகேஷ் மோட்டி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Trending
மேற்கொண்டு இருவரும் இணைந்து கடைசி விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின் 55 ரன்களைச் சேர்த்த நிலையில் குடகேஷ் மோட்டி தனது விக்கெட்டை இழந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜொமல் வாரிக்கன் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 41.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நோமன் அலி ஹாட்ரிக் விக்கெட்டுகள் உள்பட 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியும் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் முகமது ஹுரைரா 9 ரன்னிலும், அடுத்து வந்த பாபர் ஆசாம் ஒரு ரன்னிலும், கேப்டன் ஷான் மசூத் 15 ரன்னிலும், காம்ரன் குலாம் 16 ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் இணைந்த சௌத் சகீல் மற்றும் முகமது ரிஸ்வான் இணை பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் சேர்ந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சௌத் சகீல் 32 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 49 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற அந்த அணி 154 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜொமல் வாரிக்கன் 4 விக்கெட்டுகளையும், குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து 9 ரன்கள் முன்னிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now