வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 4ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை ப்ளோரிடாவில் நடைபெறுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகுக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது, 5ஆவது டி20 போட்டி அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவுக்கு சென்றடைந்தனர். இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டி20 போட்டி நாளை நடக்கிறது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீ vs இந்தியா
- இடம் - லௌடர் ஹில், ப்ளோரிடா
- நேரம் - இரவு 8 மணி
போட்டி முன்னோட்டம்
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள 3 போட்டிகளில் இரண்டில் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதில் மீதமுள்ள இரு போட்டிகளில் ஒன்றில் இந்திய அணி வெற்றிபெற்றால் கூட தொடரை வெல்லும் என்பதால் தொடரின் மீதனா எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதில் 3ஆவது டி20 போட்டியில் காயமடைந்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா குணமடைந்து விட்டதாகவும் 4ஆவது டி20 போட்டியில் அவர் விளையாடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதல் 3 போட்டிகளில் அணியில் இடம் பிடிக்காத ஹர்சல் படேல், குல்தீப் யாதவுக்கு கடைசி இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த தொடரில் சொதப்பி வரும் ஆவேஷ் கான், ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படலாம். கடந்த ஐந்து டி20 போட்டிகளில் அவர் டெத் ஓவர்களில் 5.2 ஓவர்களில் 17.4 என்ற எகானமி ரேட்டில் விட்டுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றாலும், மூன்றாவது போட்டியில் கடைசி கட்டத்தில் சொதப்பியதால் தோல்வியைத் தழுவியது. இதனால் வரும் போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், பூரன், ஹெட்மையர் என எதிரடி பேட்ஸ்மேன்களும், அகில் ஹொசைன், அல்ஸாரி ஜோசப் உள்ளிட்டோர் பந்துவீச்சிலும் இருப்பது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 23
- வெஸ்ட் இண்டீஸ் - 7
- இந்தியா - 15
- முடிவில்லை - 1
உத்தேச லெவன்
வெஸ்ட் இண்டீஸ் - பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன் (கே), ஷிம்ரோன் ஹெட்மியர், டெவோன் தாமஸ் (வாரம்), ரோவ்மேன் பவல், டொமினிக் டிரேக்ஸ், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், ஓபேட் மெக்காய்
இந்தியா - ரோஹித் சர்மா (கே), சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த், நிக்கோலஸ் பூரன்
- பேட்டர்ஸ் – சூர்யகுமார் யாதவ், கைல் மேயர்ஸ், ரோவ்மன் பவல், ஷிம்ரோன் ஹெட்மியர், ஷ்ரேயாஸ் ஐயர்
- ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா
- பந்துவீச்சாளர்கள் - புவனேஷ்வர் குமார், அகேல் ஹொசைன், டொமினிக் டிரேக்ஸ்
Win Big, Make Your Cricket Tales Now