
West Indies vs Ireland 2nd ODI Postponed After 2 Covid Cases (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அயர்லாந்து அணியைச் சேர்ந்த சில வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, இப்போட்டியை ஒத்திவைப்பதாக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளன.