Advertisement
Advertisement
Advertisement

WI vs PAK, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி பார்போடாஸில் நாளை நடைபெறுகிறது.

Advertisement
West Indies vs Pakistan, 2nd T20I – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
West Indies vs Pakistan, 2nd T20I – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (CRICKETNMORE)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 30, 2021 • 02:52 PM

பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி20, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான பாகிஸ்தான் அணியும் சில நாள்களுக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 30, 2021 • 02:52 PM

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி பார்போடாஸிலுள்ள கிங்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முந்தினம் நடைபெற்றது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டத்தாக அறிவிக்கப்பட்டது.

Trending

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை பார்போடாஸில் நடைபெறுகிறது.

போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான்
  •     இடம் - கிங்ஸ்டன் ஓவல், பார்போடாஸ்
  •     நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

வெஸ்ட்  இண்டீஸ் அணி

கீரேன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய உத்தவேகத்துடனும், டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் முனைப்போடும் இப்போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிலும் கிறிஸ் கெயில், எவின் லூயிஸ், நிக்கோலஸ் பூரன், ரஸ்ஸல் என அதிரடி வீரர்கள் பேட்டிங்கில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வருவதால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான வெற்றி வாய்ப்பே அதிகம் என கருத்தப்படுகிறது.

அதேசமயம் பந்துவீச்சிலும் ஷெல்டன் காட்ரெல், டுவைன் பிராவோ, ஹெய்டன் வால்ஷ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

பாகிஸ்தான் அணி

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரை இழந்துள்ளது.

இதனால் இத்தொடரையாவது கைப்பற்ற வேண்டுமென்ற உத்வேகத்துடன் அந்த அணி செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோருடன், முகமது ஹபீஸ், ஃபகர் ஸமான் ஆகியோரும் அதிரடியாக விளையாடும் பட்சத்தில் அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.

பந்துவீச்சில் ஹசன் அலி, சாஹீத் அஃப்ரிடி ஆகியோர் அபாரமாக செயல்பட்டு வருவது அணியின் நம்பிக்கையை அதிரிகரித்துள்ளது. 

நேருக்கு நேர்

  •     மோதிய ஆட்டங்கள் - 15
  •     வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 3
  •     பாகிஸ்தான் வெற்றி -11

உத்தேச அணி

வெஸ்ட் இண்டீஸ் - எவின் லூயிஸ் / லென்டல் சிம்மன்ஸ், ஆண்ட்ரே பிளெட்சர், சிம்ரான் ஹெட்மையர், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், கீரோன் பொல்லார்ட் (கே), ஆண்ட்ரே ரஸ்ஸல், கெவின் சின்க்ளேர், ஹேய்டன் வால்ஷ், ஓபட் மெக்காய், ஷெல்டன் காட்ரெல்.

பாகிஸ்தான் - ஷர்ஜீல் கான், முகமது ரிஸ்வான், பாபர் ஆஸம் (கே), முகமது ஹபீஸ், ஃபகார் ஜமான், அஸம் கான், ஷதாப் கான், ஹசன் அலி, முகமது வாசிம் ஜூனியர், ஷாஹீன் அஃப்ரிடி, உஸ்மான் காதர்

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - முகமது ரிஸ்வான், நிக்கோலஸ் பூரன்
  • பேட்ஸ்மேன்கள் - பாபர் ஆஸம், ஷிம்ரான் ஹெட்மியர், எவின் லூயிஸ், கீரான் பொல்லார்ட்
  • ஆல் -ரவுண்டர்கள் - முகமது ஹபீஸ், ஆண்ட்ரே ரசல்
  • பந்து வீச்சாளர்கள் - உஸ்மான் காதிர், ஹசன் அலி, ஹேடன் வால்ஷ்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement