
West Indies vs Pakistan, 4th T20I – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை கயானாவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றும்.
அதேவேளை வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெறும் பட்சத்தில் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்யும். இதனால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.