Advertisement

பாக். தொடரை ரத்து செய்த இங்கிலாந்து, இந்திய தொடரை ரத்து செய்யுமா - மைக்கேல் ஹோல்டிங்

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்த இங்கிலாந்தால், அதையே இந்தியாவிடம் செய்துவிடமுடியுமா? என்று மைக்கேல் ஹோல்டிங் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை விளாசியுள்ளார்.

Advertisement
'Western Arrogance': Holding Slams England For Canceling Pakistan Tour
'Western Arrogance': Holding Slams England For Canceling Pakistan Tour (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 06, 2021 • 07:37 PM

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி, போட்டி தொடங்குவதற்கு நில நிமிடங்களுக்கு முன்னதாக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை காரணம் காட்டி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 06, 2021 • 07:37 PM

நியூசிலாந்தை தொடர்ந்து இங்கிலாந்து அணியும் அதே காரணத்தை காட்டி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. இங்கிலாந்து அணியின் செயலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஷோயப் அக்தர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் என பலரும் அதிருப்தி தெரிவித்தனர்.

Trending

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங், இங்கிலாந்து அணியின் செயலை மிகக்கடுமையாக கண்டித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய மைக்கேல் ஹோல்டிங், “கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், தடுப்பூசி கூட வராத காலக்கட்டத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று முழு தொடரிலும் ஆடியது. இங்கிலாந்துக்கு பாகிஸ்தான் கொடுத்த மரியாதையை, இங்கிலாந்து திருப்பி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதே விஷயத்தை இந்தியாவுக்கு எதிராக செய்திருக்குமா இங்கிலாந்து..? செய்ய முடியாது. ஏனெனில் இந்தியா பணக்கார மற்றும் சக்திவாய்ந்த கிரிக்கெட் வாரியத்தை கொண்டது” என்று இங்கிலாந்தின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement