
ஐபிஎல் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இதற்காக பல்வேறு பணிகளில் ஸ்டார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சுமார் 5000 கோடி ரூபாய் அளவுக்கு விளம்பரங்கள் ஸ்டார் நிறுவனத்திடம் ஒப்பந்தமாகியுள்ளது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் முன்னோட்டம் குறித்து தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஹர்சா போக்லே இன்ஸ்டாகிராம் மூலம் பேட்டி அளித்தார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் எழுப்பிய கேள்விகளுக்கு ஹர்சா போக்லே பதில் அளித்து வந்தார். அப்போது திடீரென்று யார் நீங்கள்,உங்களுக்கு என்ன வேண்டும்? ஏன் இங்கு வந்தீர்கள் என ஹர்சா போக்லே நேரலையில் கோபமாக கூறினார்.
பின்னர் கேமிரா விழுந்தது போல் லைவ் பாதியிலேயே தடைப்பட்டு நின்றது. இதனையடுத்து ஹர்சா போக்லேவிற்கு என்ன ஆச்சு, அவர் நிலை என்ன? யாரோ அவரை தாக்கிவிட்டார்களா என்று ரசிகர்கள் பதறி போய்விட்டனர். இதனையடுத்து ஹர்சா போக்லேவின் அந்த நேரலை வைரலானது.