
கரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட 14ஆவது சீசன் ஐபிஎல் தொடர், நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.
ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 5ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் முதல் பாதியில் ஓர் அணி எப்படி விளையாடியது என்பது முக்கியமில்லை என ராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஸி கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஓர் அணி முதலிடத்தில் உள்ளதோ, 5ஆவது இடத்தில் உள்ளதோ, போட்டியின் முதல் பாதியில் எப்படி விளையாடியது என்பது முக்கியமில்லை. 2ஆம் பாதியில் எப்படி விளையாடுகிறது என்பதைப் பொறுத்துத்தான் எல்லாமும் மாறும். நாங்கள் தற்போது நல்ல நிலையில் உள்ளோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ள ஓர் அணி நன்றாக விளையாடும் என்பதில் நம்பிக்கை உள்ளவன். அணி வீரர்களுடன் நன்குப் பழகி அந்த மகிழ்ச்சியையும் நேர்மறை எண்ணங்களையும் கொண்டு வர முயற்சி செய்வேன்.