-mdl.jpg)
டி20 உலகக்கோப்பை தொடரில் அரை இறுதிச்சுற்றுக்கே தகுதி பெற வாய்ப்பே இல்லை என்ற கருதப்பட்ட பாகிஸ்தான் அணி, நெதர்லாந்து அணியின் வெற்றியின் காரணமாக அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அதுவரை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை கடுமையாக விமர்சித்த அனைவரும் சற்று வாயடைத்து போயிருந்தனர். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட பாபர் அசாம் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெல்லும் என எதிர்பார்த்த நிலையில், இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் பாகிஸ்தான் அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணி பென்ஸ் ஸ்டோக்ஸின் அபாரமான அதிகாரத்தின் மூலம் பாகிஸ்தான் அணியை 5 வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சிலருக்கு மட்டுமே கிடைக்கும் அரிதான வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கு கிடைத்தும், இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதால் மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.