
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணி இதுவரை விளையாடிய இரு ஆட்டங்களிலும் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா பங்கேற்கவில்லை. பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. எனினும் இதுபற்றி மும்பை அணி தரப்பிலிருந்து அறிவிப்பு எதுவும் வரவில்லை.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி குறித்து இந்திய முன்னாள் வீரர் சபா கரீம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணிக்காக பாண்டியா தேர்வானபோது முழு உடற்தகுதியுடன் இருந்தாரா? அப்படி உடற்தகுதியுடன் இருந்திருந்தால் அவருடைய தேர்வு சரியே. மும்பை அணிக்காக இரு ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை. அவருக்கு எப்போது காயம் ஏற்பட்டது? இந்திய அணித் தேர்வானபோது ஏற்பட்டதா அல்லது ஐபிஎல் போட்டிக்காகத் தயாராகும்போது ஏற்பட்டதா? சில விஷயங்களை முறையாக அறிவிக்க வேண்டியது அவசியம்.