
WI v SA, 1st Test: Debutant Seales Rocks South Africa After Ngidi's Fifer Skittles West Indies Out F (Image Source: Google)
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் , ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நேற்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் மற்றும் ஷாய் ஹோப் களமிறங்கினர்.
ஹோப் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்துவந்த போனருடன் கேப்டன் பிராத்வெய்ட் ஜோடி சேர்ந்தார். ஆனால், 15 ரன்கள் எடுத்திருந்த பிராத்வெய்ட்டும் வெளியேற்றினார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.