
WI vs BAN, 2nd ODI: West Indies are all out for 108! (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கயானாவில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக முடிவெடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப் 18, கைல் மேயர்ஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதனைத் தொடந்து வந்த ஷமாரா ப்ரூக்ஸ், பிராண்டன் கிங், நிக்கோலஸ் பூரன் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.