Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, இரண்டாவது டி20 போட்டி: இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது.

Advertisement
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, இரண்டாவது டி20 போட்டி: இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, இரண்டாவது டி20 போட்டி: இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 10, 2024 • 02:06 PM

West Indies vs England 2nd T20I Dream11 Prediction: இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 10, 2024 • 02:06 PM

இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே முதல் டி20 போட்டியில் வெற்றிபெற்றுள்ள நிலையில், தங்கள் வெற்றியைத் தொடர முயற்சிக்கும். ஆதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Trending

WI vs ENG 2nd T20I:போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து
  • இடம் - கென்ஸிங்டன் ஓவால் கிரிக்கெட் மைதானம், பார்படாஸ்
  • நேரம் - நவம்பர் 11, நள்ளிரவு 1.30 மணி (இந்திய நேரப்படி)

WI vs ENG 2nd T20I Pitch Report

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இப்போட்டியானது பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 52 டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில் அதில் 32 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 17 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 139 ரன்களாக உள்ள நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 126 ரன்களாக உள்ளது. இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 224 ரன்களாக இருக்கிறது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

WI vs ENG 2nd T20I: Where to Watch?

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலை ஒளிபரப்பு செய்யவில்லை. இதனால் இத்தொடரை பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் நேரலையில் காணலாம். 

WI vs ENG ODI Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 108
  • வெஸ்ட் இண்டீஸ் - 54
  • இங்கிலாந்து - 48
  • முடிவில்லை - 06

West Indies vs England 2nd T20I Probable Playing XI

வெஸ்ட் இண்டீஸ் உத்தேச லெவன்: பிராண்டன் கிங், எவின் லூயிஸ், நிக்கோலஸ் பூரன், ஷிம்ரோன் ஹெட்மையர், ரோவ்மேன் பவல் (கே), ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், ஆண்ட்ரே ரஸல், ரொமாரியோ ஷெப்பர்ட், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், குடகேஷ் மோட்டி

இங்கிலாந்து உத்தேச லெவன்: பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ், ஜோஸ் பட்லர் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், சாம் கரன், டான் மௌஸ்லி, ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், சாகிப் மஹ்மூத், ரீஸ் டாப்லி/ஜோஃப்ரா ஆர்ச்சர்

WI vs ENG 2nd T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் -  நிக்கோலஸ் பூரன்(துணை கேப்டன்), பில் சால்ட்
  • பேட்ஸ்மேன்கள் - பிராண்டன் கிங், எவின் லூயிஸ், வில் ஜேக்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டோன் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல்
  • பந்துவீச்சாளர்கள் - ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷமார் ஜோசப், சாகிப் மஹ்மூத்

WI vs ENG 2nd T20I Dream11 Prediction, WI vs ENG Dream11 Prediction, Today Match WI vs ENG, WI vs ENG T20I Series, WI vs ENG Dream11 Team, Fantasy Cricket Tips, WI vs ENG Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between West Indies vs England

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement