
WI vs Eng, 2nd Test: Brathwaite, Blackwood tons frustrate visitors on Day 3 (Stumps) (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2அஆவது டெஸ்ட் கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரூகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, கேப்டன் ஜோ ரூட்டின் 153 ரன்கள் குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த லாரன்ஸ்சின் 91 ரன்கள் மற்றும் பென் ஸ்டோக்ஸ்சின் அதிரடி சதம் ஆகியோரின் பங்களிப்பில் 150.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 507 ரன்கள் குவித்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜான் கேம்பல், ஷமாரா ப்ரூக்ஸ், நக்ருமா போனர், ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.