Advertisement

WI vs ENG, 3rd Test: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Advertisement
WI vs ENG, 3rd Test: West Indies seal series 1-0 with emphatic win
WI vs ENG, 3rd Test: West Indies seal series 1-0 with emphatic win (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 27, 2022 • 10:37 PM

வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிரெனாடாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 27, 2022 • 10:37 PM

அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜாக் லீச் 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷகிப் 49 ரன்னும், அலெக்ஸ் லீஸ் 31 ரன்னும் எடுத்தனர்.

Trending

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட், கீமர் ரோச், கைல் மேயர்ஸ், அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய விக்கெட் கீப்பர் ஜோஷ்வா சில்வா சதமடித்து அவுட்டாகாமல் இருந்தார்.

இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஓவர்டோன், சாகிப் மகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். 

பின் 93 ரன்கள் பின்தங்கிய இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அசத்தலாக பந்து வீச, சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் லீஸ் 31 ரன், பேர்ஸ்டோவ் 22 ரன் என இரட்டை இலக்கை தாண்டினர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர். 

இதனால் மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீசை விட 10 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

அதன்பின் இரண்டு விக்கெட்டுகளே கையிலிருந்த நிலையில் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி மேற்கொண்டு 17 ரன்கள் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. 

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய கைல் மேயர்ஸ் 18 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பின் 28 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது.

அதன்படி களமிறங்கிய விண்டீஸ் அணி 4.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றி சாதனைப்படைத்தது. மேலும் இப்போட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஷுவா டா சில்வா ஆட்டநாயகனாகவும், கிரேக் பிராத்வைட் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement