Advertisement
Advertisement
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை மறுநாள் செயின்ட் லூசியாவில் நடைபெறவுள்ளது.

Advertisement
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 15, 2024 • 09:30 PM

West Indies vs England 4th T20I Dream11 Prediction: இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி டி20 தொடரில் நடந்து முடிந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 15, 2024 • 09:30 PM

இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் 4ஆவது டி20 போட்டியானது நாளை மறுநாள் (நவ.17)செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே டி20 தொடரை வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும். ஆதேசமயம் தொடரை இழந்துள்ள் வெஸ்ட் இண்டீஸ் அணி முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Trending

WI vs ENG 4th T20I:போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து
  • இடம் -  டேரன் சமி கிரிக்கெட் மைதானம், செயின்ட் லூசியா
  • நேரம் - நவம்பர் 17, நள்ளிரவு 1.30 மணி (இந்திய நேரப்படி)

WI vs ENG 4th T20I Pitch Report

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இப்போட்டியானது செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 43 டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில் அதில் 19 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 23 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 147 ரன்களாக உள்ள நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 130 ரன்களாக உள்ளது. இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 218 ரன்களாக இருக்கிறது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

WI vs ENG 4th T20I: Where to Watch?

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலை ஒளிபரப்பு செய்யவில்லை. இதனால் இத்தொடரை பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் நேரலையில் காணலாம். 

WI vs ENG T20I Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 34
  • வெஸ்ட் இண்டீஸ் - 17
  • இங்கிலாந்து - 16
  • முடிவில்லை - 00

West Indies vs England 4th T20I Probable Playing XI

வெஸ்ட் இண்டீஸ் உத்தேச லெவன்: எவின் லூயிஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், ரோவ்மேன் பவல் (கே), ஷிம்ரோன் ஹெட்மியர், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், அல்ஜாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, அகீல் ஹொசைன், டெரன்ஸ் ஹிண்ட்ஸ்.

இங்கிலாந்து உத்தேச லெவன்: பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ், ஜோஸ் பட்லர் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், ஜேக்கப் பெத்தேல், டான் மௌஸ்லி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், சாகிப் மஹ்மூத்

WI vs ENG 4th T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் -  நிக்கோலஸ் பூரன்(துணை கேப்டன்), பில் சால்ட், ஜோஸ் பட்லர்
  • பேட்ஸ்மேன்கள் - எவின் லூயிஸ், வில் ஜேக்ஸ், ரொவ்மன் பாவெல்
  • ஆல்-ரவுண்டர்கள் - சாம் கரன் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன்
  • பந்துவீச்சாளர்கள் - ஆதில் ரஷித், அகீல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப்

WI vs ENG 4th T20I Dream11 Prediction, Today Match WI vs ENG, WI vs ENG Dream11 Team, West Indies vs England, Fantasy Cricket Tips, WI vs ENG Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the West Indies vs England T20I series 2024

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement