Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! 

வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

Advertisement
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! 
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!  (Image Source: CricketNmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 14, 2023 • 11:00 AM

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 14, 2023 • 11:00 AM

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று செயிண்ட் ஜார்ஜிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே முதலாவது டி20 போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியிலும் தங்களது வெற்றியைத் தக்கவைக்க போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து
  • இடம் - தேசிய கிரிக்கெட் மைதானம், செயிண்ட் ஜார்ஜ்
  • நேரம் - இரவு 11 மணி (இந்திய நேரப்படி)

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 25
  • வெஸ்ட் இண்டீஸ் - 15
  • இங்கிலாந்து - 10

பிட்ச் ரிப்போர்ட்

செயிண்ட் ஜார்ஜ் மைதானமானது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் இங்கு பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாது என்பதால் குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியாக இது ரசிகர்களுக்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.

உத்தேச லெவன்

வெஸ்ட் இண்டீஸ்: பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், ஷிம்ரான் ஹெட்மையர், ரோவ்மேன் பவல் (கே), ஆண்ட்ரே ரஸ்ஸல், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், அகீல் ஹொசைன், அல்சாரி ஜோசப், மேத்யூ ஃபோர்டே.

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கே), பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ், பென் டக்கெட், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷித், ரீஸ் டாப்லி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ஜோஸ் பட்லர், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன்
  • பேட்ஸ்மேன்கள்: கைல் மேயர்ஸ், பென் டக்கெட், வில் ஜாக்ஸ் (துணை கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்: லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், ஆண்ட்ரே ரஸ்ஸல் (கேப்டன்), ரொமாரியோ ஷெப்ஃபர்ட்
  • பந்துவீச்சாளர்கள்: ஆதில் ரஷித்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
வீடு Special Live Cricket Video Sports