WI vs IND, 2nd ODI: பேட்டிங்கில் படுமட்டமாக சொதப்பிய இந்தியா; 181 ரன்களுக்கு ஆல் அவுட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று பார்போடாஸில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதேசமயம் சஞ்சு சாம்சன், அக்ஸர் படேல் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
Trending
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷன் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். அதன்பின் 34 ரன்கள் எடுத்திருந்த ஷுப்மன் கில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்த இஷான் கிஷானும் 55 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அக்ஸர் படேல் ஒரு ரன்னிலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 7 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 9 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 24 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 10 ரன்களுக்கும் என அடுத்தடுத்து வரிசையாக சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஆகியோர் தங்களால் முடிந்த ரன்களைச் சேர்த்தனர்.
இதனால் இந்திய அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் குடகேஷ் மோட்டி, ரொமாரியோ செஃபெர்ட் தலா 3 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விண்டீஸ் அணி விளையாடவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now