இரண்டாவது டி20: மீண்டும் போட்டியின் நேரம் மாற்றம் - ரசிகர்கள் அதிருப்தி!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி மேலும் ஒரு மணி நேரம் தமாதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 29ஆம் தேதி தொங்கி நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இராண்டவது போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போட்டி செயிண்ட் கிட்ஸ் தீவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற விருந்தது.
Trending
இந்நிலையில் போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில், போட்டிக்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அந்த வாரியம், “போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்காது. இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு போட்டி துவங்கும். மேற்கிந்தியத் தீவுகள் நேரப்படி பகல் 11:30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்” எனத் தெரிவித்தது. இந்நிலையில் போட்டி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்குத்தான் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது போட்டி தொடங்குவது மேலும் தாமதமாகியுள்ளது. அதன்படி தற்போது இப்போட்டியானாது இந்திய நேரப்படி 11 மணிக்கும் தொடங்கும் எனவும், டாஸ் 10.30 மணிக்கு போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now