
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களை இந்தியா கைப்பற்றியது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றது. 3ஆவது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதனால் இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4ஆவது 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள லாடர்ஹிலில் நடக்கும் இப்போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. தொடரை இழக்காமல் இருக்க நாளைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா
- இடம் - லாடர்ஹில், ஃபுளோரிடா
- நேரம் - இரவு 8 மணி (இந்திய நேரப்படி)