WI vs IND, 5th T20I: சூர்யகுமார் அரைசதம்; விண்டீஸுக்கு 166 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து மூடிந்த 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பதிவுசெய்து 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் தொடரின் கடைசி போட்டி இன்று புளோரிடாவில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து விண்டீஸ் அணியை பந்துவீச அழைத்தது.
Trending
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 ரன்களுக்கும், ஷுப்மன் கில் 9 ரன்களுக்கும் என அடுத்தடுத்து அகீல் ஹொசைன் பந்துவீச்சில் விக்கெட்ட்டை இழந்தனர்.
இதையடுத்து இணைந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின் 27 ரன்கள் எடுத்த நிலையில் திலக் வர்மா, ரோஸ்டன் சேஸின் அபாரமான கேட்சின் மூலம் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சனும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதர் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 61 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அர்ஷ்தீப் சிங்கும் 8 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.
இறுதியில், அக்ஸர் படேல், முகேஷ் குமார் ஆகியோர் பவுண்டரி விளாச 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரொமாரியோ செஃபெர்ட் 4 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now