Advertisement

WI vs NZ, 2nd ODI: சௌதி, போல்ட் பந்துவீச்சில் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 20, 2022 • 10:54 AM
WI vs NZ, 2nd ODI: Finn Allen and the New Zealand pacers lead their team to a comfortable win
WI vs NZ, 2nd ODI: Finn Allen and the New Zealand pacers lead their team to a comfortable win (Image Source: Google)
Advertisement

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி பார்போடாஸில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.

Trending


இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் பின் ஆலன் 4 ரன்களில் சதத்தை தவறவிட்டார். அவர் 96 ரன்னும் (7 பவுண்டரி, 3 சிக்சர்), மிச்சேல் 41 ரன்னும் எடுத்தனர். 

இதனால் 48.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களை மட்டுமே எடுத்தது. வெஸ் இண்டீஸ் தரப்பில் கெவின் சின்கிளையர் 4 விக்கெட்டும், ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டும், அகீல் ஹொசைன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இதையடுத்து போட்டிக்கு இடையே மழை பெய்த காரணத்தால் டக்வெர்த் லூயிஸ் முறைப்பாடி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 41 ஓவர்களில் 212 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அந்த அணியில் யானிக் அதிகபட்சமாக 52 ரன்னும் 2 பவுண்டரி, 1 சிக்சர், அல்ஜாரி ஜோசப் 49 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் சௌதி 4 விக்கெட்டும், போல்ட் 3 விக்கெட்டும், சான்ட்னெர், பிலிப்ஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதனால் 35.3 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு நியூசிலாந்து பதிலடி கொடுத்தது. இந்த வெற்றியால் 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement