
WI vs NZ, 3rd T20I: West Indies find form to deny New Zealand series sweep (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேய நடைபெற்ற முதலிரு டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ஜமைக்காவில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்தில் 15, டெவன் கான்வே 21, மிட்செல் சாண்ட்னர் 13, கேன் வில்லியம்சன் 24 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.