
WI vs Pak, 2nd Test: Fawad showed us how to apply ourselves on this wicket, says Holder (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 302 ரன்களுக்கு டிக்ளர் செய்தது.
இதில் பாகிஸ்தான் அணியின் ஃபாவத் ஆலம் சதமடித்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஃபாவத் அடிக்கும் 5ஆவது சதமாகவும், இந்த ஆண்டில் அடித்த 4ஆவது சதமாகவும் இது அமைந்தது.
இந்நிலையில் போட்டி முடிவுக்கு பின் பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், இங்கு எப்படி விளையாட வேண்டுமென்பதை ஃபாவத் ஆலம் நன்கு அறிந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.