
WI vs PAK : Match Abandoned due to rain (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸிலும் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதற்கிடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் 9 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்களைச் சேர்த்திருந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.