Advertisement

WI vs PAK : 17 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி அறிவிப்பு!

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 17 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது.

Advertisement
WI vs PAK : West Indies have named a 17-member squad for the upcoming  Pakistan Test series
WI vs PAK : West Indies have named a 17-member squad for the upcoming Pakistan Test series (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 09, 2021 • 08:10 PM

வெஸ்ட் இண்டீஸிஸ் சுற்றுப்பயணம் செய்துவரும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 4 டி20, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முன்னதாக நடந்து முடிந்த 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 09, 2021 • 08:10 PM

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி ஜமைக்காவிலுள்ள கிங்ஸ்டனில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணி ஏற்கெனவெ அறிவிக்கப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டிக்கான 17 பேர் அடங்கிய கிரேக் பிராத்வெயிட் தலைமையிலான் வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.

இதில் வேகப்பந்துவீச்சாளர் செமர் ஹோல்டர், ஷம்ராஹ் ப்ரூக்ஸ் ஆகியோர் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளனர். 

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி

கிரேக் பிராத்வைட் (கேப்டன்),ஜெர்மைன் பிளாக்வுட் (துணை கேப்டன்),க்ரூமா பொன்னர்,ஷமர் ப்ரூக்ஸ்,ராகீம் கார்ன்வால், ரோஸ்டன் சேஸ்,ஜோசுவா டா சில்வா,ஜஹ்மர் ஹாமில்டன்,செமர் ஹோல்டர்,ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப்,அல்சாரி ஜோசப்,கைல் மேயர்ஸ்,கீரன் பவல், கீமார் ரோச்,ஜேடன் சீல்ஸ்,ஜோமல் வாரிகன்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement