
WI vs PAK : Wickets at the end gives WI momentum at the break (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று கயானாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஷர்ஜில் கான் - முகமது ரிஸ்வான் இணை சிறப்பான தொடக்கத்தை வழங்கியது. பின் ஷர்ஜில் கான் 20 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது ரிஸ்வானும் 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் அரைசதம் கடந்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். பின் அவரும் 51 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.