களத்தில் எங்கள் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த வேண்டும் - கீரேன் பொல்லார்ட்
களத்தில் நானும், நிக்கோல்லஸ் பூரனும் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கிரேன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா ஆணிகளுக்கு இடையேயான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி சமன் செய்துள்ளது. இப்போட்டி முடிவுக்கு பின் பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கீரேன் பொல்லார்ட், களத்தில் நானும், நிக்கோல்லஸ் பூரனும் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய பொல்லார்ட்,“இப்போட்டியில் பந்து வீச்சாளர்கள் எங்கள் அணியின் துருப்புச்சீட்டாக விளங்கினர். மேலும் தென் ஆப்பிரிக்க அணி முதல் 6 ஓவர்களில் சிறப்பாக விளையாடியது. ஆனால் அதன்பின் அவர்களை 166 ரன்களில் சுருட்டியது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நாங்கள் தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தோம். ஆனால் 7 முதல் 11 ஆவது ஓவருக்கு இடையில் நாங்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்ததால், இப்போட்டியில் சரிவை சந்தித்தோம்.
மேலும் இப்போட்டியில் நானும், நிக்கோலஸ் பூரனும் அதிரடியா விளையாட முயற்சித்தோம். அதுவே நாங்கள் விக்கெட்டை இழக்க காரணமாக அமைந்தது. அதனால் இனி வரும் போட்டிகளில் நாங்கள் எங்கள் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த வேண்டும். அப்போது தான் எங்களால் விக்கெட் இழப்பை தடுத்து அணியின் வெற்றிக்கு உதவ முடியும்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now