
WI vs SA, 2nd Test, Day 1: Elgar, De Kock fifties steady South Africa (Image Source: Google)
தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று செயிண்ட் லூசியாவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசத்தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம், பீட்டர்சன், வன் டெர் டௌசன், வெர்ரோயின் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டீன் எல்கர், டி காக் இருவரும் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டீன் எல்கர் ஆட்டமிழந்தார்.