WI vs SA 2nd Test,Day 3: 2வது இன்னிங்ஸில் சொதப்பிய தென் ஆப்பிரிக்கா; விண்டிஸிற்கு 324 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 324 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயாப 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயிண்ட் லுசியாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
Trending
அதனபடி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 298 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சாக குயின்டன் டிகாக் 96 ரன்னும், கேப்டன் எல்கர் 77 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச், கைல் மேயர்ஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்க வீரர்களின் அபார பந்து வீச்சால் அந்த அணி திணறியது. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 54 ஓவர்களில் 149 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பிளாக்வுட் 49 ரன்னும், ஷகிஹோப் 43 ரன்னும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் முலாடர் 3 விக்கெட்டும், ரபாடா, நிகிடி, கேசவ் மகராஜ் தலா 2 விக்கெட்டும் விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனால் 149 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. இம்முறை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அபாரமாக பந்து வீசினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தென் ஆப்பிரிக்கா அணியின் வான் டெர் டுசன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு ரபாடா ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடியால் தென் ஆப்பிரிக்கா அணி 150 ரன்களை கடந்தது.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில்174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அணியில் அதிகபட்சமாக வான் டெர் டுசன் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் விளையாடி ரபாடா 40 ரன்னில் அவுட்டானார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 4 விக்கெட்டும், கைல் மேயர்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 309 ரன்கள் தேவை என்ற இலக்குடன் நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now