Advertisement

WI vs SA, 2nd Test: மகாராஜ் ஹாட்ரிக்கில் தொடரைக் கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா!

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆபிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Advertisement
WI vs SA: Keshav Maharaj Hat-Trick Sends West Indies Spinning
WI vs SA: Keshav Maharaj Hat-Trick Sends West Indies Spinning (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 22, 2021 • 09:30 AM

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 22, 2021 • 09:30 AM

இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயிண்ட் லுசியாவில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

Trending

முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 298 ரன்னில் ஆல் அவுட்டானது. டிகாக் 96 ரன்னும், கேப்டன் எல்கர் 77 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச், கைல் மேயர்ஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 149 ரன்களில் சுருண்டது. பிளாக்வுட் 49 ரன்னும், ஷாய் ஹோப் 43 ரன்னும்
எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா சார்பில் மூல்டர் 3 விக்கெட்டும், ரபாடா, நிகிடி, கேசவ் மகராஜ் தலா 2 விக்கெட்டும், நோர்ட்ஜே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 149 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா 2ஆவது இன்னிங்சில் 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வான் டெர் டுசன் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரபாடா 40 ரன்னில் அவுட்டானார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 4 விக்கெட்டும், கைல் மேயர்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதன்பின் 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் கிரண் பாவெல் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதமடித்தார். அவர் 51 ரன்னில் அவுட்டானார். கைல் மேயர்ஸ் 34 ரன்னும், கீமர் ரோச் 27 ரன்னும், பிளாக்வுட் 25 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 165 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் கேசவ் மகாராஜ் ஹாட்ரிக் விக்கெட் உள்பட 5 விக்கெட்டும், ரபாடா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 158 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 2- 0 என கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் விருது ரபாடாவுக்கும், தொடர் நாயகன் விருது குயின்டன் டி காக்குக்கும் அளிக்கப்பட்டது.

மேலும் இப்போட்டியில் கேசவ் மகாராஜ் ஹாட்ரிக் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம், தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement