Advertisement

மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் vs நியூசிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் vs நியூசிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் vs நியூசிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 17, 2024 • 02:04 PM

West Indies Women vs New Zealand Women 2nd Semifinal ICC Women's T20 World Cup 2024: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு குரூப் ஏ பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் முன்னேறி அசத்தின.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 17, 2024 • 02:04 PM

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.   

Trending

WI-W vs NZ-W 2nd Semifinal: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் vs நியூசிலாந்து மகளிர்
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
  • நேரம் - அக்.18 இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

WI-W vs NZ-W 2nd Semifinal: Pitch Report

வெஸ்ட் இண்டீஸ் vs நியூசிகாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 58 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 33 முறையும், சேஸிங் செய்த அணி 35 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 140 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 215 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

WI-W vs NZ-W 2nd Semifinal Head-to-Head 

  • மோதிய போட்டிகள் - 22
  • நியூசிலாந்து மகளிர் அணி - 17
  • வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி - 05
  • முடிவில்லை - 00

WI-W vs NZ-W 2nd Semifinal: Live Streaming Details

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை டிஸ்னி பிளர் ஹாட் ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

West Indies Women vs New Zealand Women Possible XIs 

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி: ஹீலி மேத்யூஸ் (கே), கியானா ஜோசப், ஷெமைன் காம்பெல், டியான்ட்ரா டோட்டின், சினெல்லே ஹென்றி, செடியன் நேஷன், ஜைதா ஜேம்ஸ், அஷ்மினி முனிசார், ஆலியா அலீன், அஃபி பிளெட்சர், கரிஷ்மா ராம்ஹராக்

நியூசிலாந்து மகளிர் அணி: சூஸி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், அமெலியா கெர், சோஃபி டிவைன் (கே), புரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ், ரோஸ்மேரி மெய்ர், லியா தஹுஹு, ஈடன் கார்சன், ஃபிரான் ஜோனாஸ்

WI-W vs NZ-W 2nd Semifinal Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ஷெமைன் காம்பெல்
  • பேட்டர்ஸ்: சூஸி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், டியான்ட்ரா டோட்டின்
  • ஆல்-ரவுண்டர்கள்: சோஃபி டிவைன், அமெலியா கெர், ஹீலி மேத்யூஸ், கியனா ஜோசப்
  • பந்துவீச்சாளர்கள்: லியா தஹுஹு, ரோஸ்மேரி மெய்ர், கரிஷ்மா ராம்ஹெராக்

WI-W vs NZ-W 2nd Semifinal Dream11 Prediction, Today Match WI-W vs NZ-W, WI-W vs NZ-W Dream11 Team, West Indies Women vs New Zealand Women, Fantasy Cricket Tips, WI-W vs NZ-W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the ICC Women's T20 World Cup 2024

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement