
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கான்பூரில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்து ஆடிவருகிறது. இந்நிலையில் இந்தப் பிட்ச் எப்படி இருக்கும் என்று கியூரேட்டர் விளக்கம் அளித்துள்ளார்.
கிரீன் பார்க் பிட்ச் கியூரேட்டர் ஷிவ்குமார் கூறும்போது, “பிட்ச் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பிசிசிஐயிடமிருந்தோ இந்திய அணியிடமிருந்தோ எந்த ஒரு அறிவுறுத்தலும் இல்லலை. இது ஒரு பெரிய விஷயம், கோலி, ரவிசாஸ்திரி இருந்திருந்தால் முதல் நாள் முதல் ஒருமணி நேரத்திலேயே குழியில் பட்டு பந்து திரும்பி எகிற வேண்டும் என்று கூறியிருப்பார்கள். பந்துகள் திரும்புவதில் தவறில்லை, ஆனால் இரு அணிகளுக்கும் சாதகமான பிட்சைத் தயாரிக்க வேண்டும்.
உடனே அஸ்வின் கூறுவார் அங்கு வேகப்பந்து பிட்ச் அமைக்கிறார்களே என்பார், அது மிக மோசமான வாதம், வேகப்பந்து வீச்சு இரண்டு அணிகளுக்கும் சாதகமானதுதான், ஆனால் குழிப்பிட்ச் ஒரு அணிக்கு மட்டுமே சாதகமானது, அது இந்திய அணிக்குச் சாதகமானது.