ஐபிஎல் ஏலத்தில் வில்லியம்சனை தட்டித்துக்க முனைகிறதா குஜராத் டைட்டன்ஸ்? - ஹர்திக் பாண்டியா பதில்!
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேன் வில்லியம்சனை விடுவித்துள்ளது அந்த அணியின் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், தொடர்களில் விளையாடுகிறது. நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். நியூசிலாந்து அணியை கேன் வில்லியம்சன் வழிநடத்துகிறார்.
இந்நிலையில் இந்தியாவின் பிரபல லீக் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வேலைகள் சூடுபிடித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக ஐபிஎல் மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது.
Trending
அந்த வகையில் ஐபிஎல் தொடரில் இருமுறை கோப்பையை வென்ற அணியான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி அதன் கேப்டனான கேன் வில்லியம்சனை விடுவித்துள்ளது அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்தாண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் வில்லியம்சனை வாங்க குஜராத் டைட்டன்ஸ் ஆர்வம் காட்டுமா? என்ற கேள்விக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பதில் அளித்துள்ளார். முன்னதாக பாண்டியா இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அறிமுக அணியான குஜராத்தை வெற்றிகரமாக வழிநடத்தி சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார்.
இந்த நிலையில் வில்லியம்சனை குஜராத் அணி ஏலத்தில் வாங்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த பாண்டியா,"அதுபற்றி எனக்கு தெரியவில்லை. இப்போது நான் இந்தியாவுக்காக விளையாடுகிறேன். குஜராத் அணி வில்லியம்சனை வாங்குமா என்பது பற்றி சிந்திக்க இன்னும் அதிக நேரம் உள்ளது" என தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now