
Will Pucovski unlikely for first Ashes Test (Image Source: Google)
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் வில் புக்கோவ்ஸ்கி. இவர் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் தேர்வு செய்யப்பட இருந்தார்.
மேலும் இவர் தற்போது ஆஸ்திரேலிய உள்ளூர் தொடரான சஃபீல்ட் ஷீல்ட் தொடரில் விக்டோரியா அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த புக்கோவ்ஸ்கி தலையில் பந்துபட்டு காயமடைந்தார்.
மேலும் அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பிற்கும் அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அவர் இன்னும் சரிவர குணமடையாததால், டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.