
ஐசிசி நடத்தும் தொடர்களை தவிர்த்து இந்தியா - பாகிஸ்தான் அணிகள் எந்தவித தொடரிலும் மோதி கொள்வதே கிடையாது. அரசியல் ரீதியான பிரச்சினைகள் காரணமாக ரசிகர்களும் இரு நாட்டு போட்டிகளை காண ஏக்கத்துடன் உள்ளனர்.
இந்த ஏக்கத்தை போக்குவதற்காக தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சுவாரஸ்ய முடிவை எடுத்தது. அதாவது ஆண்டிற்கு ஒரு முறை இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளுக்கு இடையே மட்டும் போட்டி நடைபெறும் வகையில் டி20 கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது.
இதுகுறித்து சமீபத்தில் பேசியிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா, 4 அணிகளும், ஒவ்வொரு ஆண்டில் இந்த தொடரை தொகுத்து வழங்கலாம் எனக் கூறியுள்ளார். மேலும் ஐசிசியிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், விரைவில் ஒப்புதல் கிடைக்கும் எனவும் கூறியிருந்தார்.